Header Ads

ad728
  • Breaking News

    வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுகம்.


    வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகத்தின் உதைப்பந்தாட்ட அணியினரின் புதிய சீருடை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று 04.08.2017 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி முதல் வாழைச்சேனை வீ.சி மைதானத்தில் இடம் பெற்றது.

    சீருடை அறிமுகத்தை முன்னிட்டு முதலாவது போட்டியாக அல்-அக்ஸா அணியினருக்கும்காத்தான்குடி சன் றைசஸ் அணிகளுக்குமிடையிலான உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இப்போட்டியில் அல்-அக்ஸா அணியின் சார்பாக சர்ஜூன் 2 கோல்களை பெற்றுக் கொடுத்ததுடன்காத்தான்குடி சன் றைசஸ் அணியினர் ஒரு கோலை மாத்திரமே பெற்ற நிலையில் வாழைச்சேனை அல்-அக்ஸா அணியினர் 2-1எனும் வித்தியாசத்தில் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.

    இந்நிகழ்வு அல்-அக்ஸா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எஸ்.ஐ. இம்தியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன்இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர்  அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களும்கல்குடா உதைப்பந்தாட்ட குழுவின் செயலாளர் இனாமுல்லாஹ் மற்றும் கழகத்தின் பழைய உருப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற அணியினருக்கு அதிதிகளால் வெற்றிச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

    செய்தியாளர் எம்.ஐ.அஸ்பாக்




    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728