கிளிநொச்சியில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்!


கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் மீது, உழவு இயந்திரத்தில் வருகைதந்த ஒருவர் வாளால் வெட்டி தப்பி சென்றுள்ளார்.
சம்பவத்தில் 53 வயது மதிக்கத்தக்க காந்திகிராமம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.