கடவுளிடம் முறையிட்டோம், கடவுள் தண்டிக்க ஆரம்பித்துள்ளார்- மஹிந்த


ராஜபக்ஷ குடும்பத்தை அவமானப்படுத்தியவர்களை கடவுள் தண்டிக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் எம்மை அவமானப்படுத்திய போது நாம் யாரிடமும் சொல்ல வில்லை. கடவுளிடமே அதனை முறையிட்டோம். தற்பொழுது கடவுள் அதற்குப் பரிகாரம் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அவர்கள் செய்த கருமங்கள் கைவினையாக ஆரம்பித்துள்ளன.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் சம்பவத்தை காரணம் காட்டி ஐ.தே.கட்சியிலுள்ள பலர் கட்சியை விட்டும் விலகப் பார்ப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தைப் பற்றி என்ன சொல்கின்றார்கள் என்பது யாரும் தெரிந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.