சில பிரச்சினைகளை கடவுளே நேரில் வந்தாலும் தீர்க்க முடியாது- அமைச்சர் ஹக்கீம்


அரசாங்கத்திலுள்ள கட்சிகளிடையே காணப்படும் பேதங்களை கடவுளே வந்தாலும் தீர்க்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
கடுவெலயில் நேற்று (24) நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின்  அமைச்சர் சுஜீவ சேமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்துக்கும் இடையில்  கருத்து மோதல்கள் இடம்பெற்றன. இதனையடுத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பிரதான கட்சிகளிடையே காணப்படும் கருத்து முரண்பாடுகளை இன்றும் நாம் மேடையிலும் கண்டோம். இது தவிர்க்க முடியாதது. இதுதான் யதார்த்தம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.