ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா இறுதி தீர்மானம் இன்று


முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமாகிய ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த சார்பு கூட்டு எதிர்க் கட்சி எம்.பிக்கள் 34 பேரின் கையொப்பத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று (08) பாராளுமன்றத்தில் நடைபெறும் கட்சித்தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் இந்த  நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்காக அவசரமாக திகதியொன்றை நிர்ணயிக்க இன்றைய  கூட்டத்தில் கோர இருப்பதாக கூட்டு எதிர்க் கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.