அணித்தலைவர் உபுல் தரங்கவுக்கு போட்டித் தடை


இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கவுக்கு இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) நடவடிக்கை எடுத்துள்ளது.
கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்திய – இலங்கைக்கு இடையிலான நேற்றைய ஒரு நாள் போட்டியின் போது பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்த காரணத்துக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்துவரும் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான 5 போட்டிகளில் இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.