வட மத்திய மாகாண சபையில் பதற்றம் – நிகழ்ச்சி நிரலுக்கு தீ வைப்பு


வட மத்திய மாகாண சபையில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சபை அமர்வின் போது நிகழ்ச்சி நிரலுக்கு தீ வைத்துள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சபைத்தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாகாண சபையின் புதிய தலைவர் டி.எம். அமரதுங்க தலைமையில் இன்று முற்பகல் சபை அமர்வுகள் ஆரம்பமான போதே இந்த பதற்ற நிலைமை தோன்றியுள்ளது.