மஹிந்தவின் மனைவி மகன்மாருக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்

(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது புதல்வர்களான யோசித்த ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
அதன்படி நாளை மஹிந்தவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவும், இளைய மகனான ரோஹித்த ராஜபக்ஷவிடம் நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவும் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் நாளைமறுநாள் இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷவிடம்  குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.