வடக்கில் இன்றும் புலிகளின் செயற்பாடுகள் : இராணுவத்தளபதி


வடக்கில் நிகழும் அசம்பாவித சம்பவங்கள் இன்னும் அடிப்படைவாதமாக உருவாகவில்லை. ஆனால் மீண்டும் ஒரு குழப்பத்திற்கு இது வாய்ப்பாக அமையும் என்ற அச்சம் உள்ளதாக இராணுவத்தளபதி மகேஷ்  சேனாநாயக்க தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழத்தை கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது. அதபோல் இன்றும் புலிகளின் செயற்பாடுகள் வடக்கில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

இராணுவத்தளபதி இந்த கருத்தினை கண்டியில் மாநாயக தேரர்களின் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.