தகவல் திணைக்களத்தின் நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் சிலர் புறக்கணிப்புமட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நிகழ்வுக்கு முழுநேர சுதந்திர ஊடகவியலாளர்களுக்கும்  ஊழல் மோசடிகளை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வந்த சுதந்திர ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஊடகவியலாளரகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக நிகழ்வுகள் நடைபெற்று வருகிறன்றன. குறித்த நிகழ்வுக்கு பல ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவரும் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கும் அரச நிர்வாக செயற்பாடுகளில் நடைபெறும் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
அண்மைகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊடக நிகழ்வுகளுக்கு அரச அதிகாரிகளின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவரும்  ஊடகவியலாளர்களுக்கு மாவட்ட தகவல் திணைக்களத்தில் பணியாற்றுபவர்  அழைப்பு விடுப்பதில்லை என்பதுடன் அரச திணைக்கள தலைவர்கள் சிலரும் தங்களை நிகழ்வுகளுக்கு அழைக்க தயங்குகின்றனர்  என சம்பந்தப்பட்ட  ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
எனவே இது குறித்து ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.