நல்லாட்சியிலிருந்து யாரும் விலகலாம்,இணையலாம்- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


நல்லாட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகிச் செல்லலாம் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நல்லாட்சி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேசிய கணக்காய்வு சட்டம் கால தாமதமாகியுள்ளமை தொடர்பில் தான் வருத்தமடைவதாகவும் தேசிய கணக்காய்வு சட்டத்தை அமுல்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
ஊடக ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெறும் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.