ஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் உடன் இடமாற்றம்.ஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம்.ஹெட்டியாரச்சி உடன் அமுலுக்கு வரும் வகையில் 04.08.2017 புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பதவிக்காக அக்கரைபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் என்று புதிய பொலிஸ் தலைமை பரிசோதகராக பொறுப்பேற்க உள்ளதாகவும் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த எட்டு மாத்திற்கு முன் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் திகாவத்துர அவர்கள் அட்டன் சிகை அலங்கார நபர் ஒருவர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் செய்த போராட்டத்தினையடுத்து முன்னாள் தலைமைய பொலிஸ் பரிசோதகர் மாற்றப்பட்டு  மேற்படி பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரி டி.பி.கே.எம்.ஹெட்டியாரச்சி பொறுப்பேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இப்பிரதேசத்தில் தகுதியானவர்கள் இருந்தும் பொறுப்பானவர்கள் இவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதிருப்பது குறித்தும் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டு வருவதும் மேலும் குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)