வல்லப்பட்டை கடத்தியவர் விமானநிலையத்தில் கைது


சட்ட விரோதமான முறையில் வல்லப்பட்டை கடத்த முயன்ற ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே குறித்த கடத்தலில் ஈடுபட முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 4.50 மணியளவில் இந்தியா, சென்னை நோக்கி பயணிக்க இருந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபரிடம் 546,000 ரூபாய் பெறுமதியான சுமார் 08 கிலோ கிராம் வல்லப்பட்டை காணப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்க பிரிவினர் குறிப்பிட்ட பொருட்களை அரசுடைமையாக்கியதோடு சந்தேநபருக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.