ஜனாசா அறிவித்தல்

வரிப்பத்தான்சேனை – 03 மஜிதுபுரத்தைச் சேர்ந்த முகம்மது காசிம் முகம்மது சுபியான் (சத்தார்) (வயது 73) அவர்கள் இன்று (2017.08.12) இறையடி சேர்ந்தார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி றாஜிஊன்.
அன்னார் நாகூர்ப்பிச்சை பாத்தும்மாவின் அன்புக் கணவரும் ஆப்தீன், தாஜூதீன், சனூன் முதலாளி (பச்சு), ஜமால்தீன், இம்றான், ஐனுல் ஆரிபா, சித்தி சுபைதா, பௌசியா, நிஹாறா, நூர்ஜஹான் ஆகியோர்களின் அன்புத் தகப்பனாருமாவார்.

ஒரு வாரகாலமாக சுகவீனமுற்ற அவர் அம்பாரை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே வபாத்தானார். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் வரிப்பத்தான்சேனை மஜிதுபுர பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் குடும்பத்தினர்.

ஆர்.எம்.பாயிஸ்
வரிப்பத்தான்சேனை- செய்தியாளர்