பிரதேச வாதத்தை விதைக்கும் அதாஉல்லா எமக்கு தேவையில்லை – முன்னாள் தவிசாளர்

அக்கரைப்பற்றில் இழந்த செல்வாக்கை கட்டியெழுப்புவதற்காக மீண்டும் பிரதேச வாதத்தை கையில் எடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா என்று இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜெபீர் மௌலவி தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் உள்ளுராட்சி தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம்  முன்வந்துள்ளது.

இத் தேர்தலில் தன் மகனை மீண்டும் மேயராக்க வேண்டுமென்பதற்காக பிரதேசங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்களை கூறி அக்கரைப்பற்று மக்களின் ஆதரவை பெற முனைகிறார் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாகடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் அக்கரைப்பற்று மக்கள் இவருக்கு எதிராக வாக்களித்த நிலையில் தன் மகன் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டால் எவ்வாறான நிலை தோன்றும் என்ற அச்சம் காரணமாகவே பிரதேச வாதம் எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.

முஸ்லிம் பிரதேசங்களில் வாழும் மக்களின் அன்றாட தேவைகளை இலகுபடுத்துவதற்காக யாருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு முறையான திட்டங்களை எமது தலைவர் ஏற்படுத்த முற்படும் போது கல்முனை மக்களுக்கு  எதிராக தமது கருத்துக்களை முன் வைக்கிறார்.

 தேசியத் தலைவர்,கிழக்கின் தலைவர் என தன்னைத்தானே புகழாரம் சூட்டும் அதாஉல்லா தன் மகனின் அரசியல் எதிர் காலத்திற்காக தன் சுய நினைவு இழந்து இப்படி பிரதேச வாதத்தை மக்களிடம் விதைப்பதன் மூலம் கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்தது ஞாபகத்திற்கு வருகின்றது.

எனவே பதவிகளுக்கும் அதிகாரத்திற்காகவும் மீண்டும் மிண்டும் முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம் என கூறினார் முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவி.