கிம்புலாஎல பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது


சுமார் 40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பிட்டிய கிம்புலாஎல பகுதியில் வைத்து ப்ளூமெண்டல் பொலிசாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட வேளையில் ஹெரோயின் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 80,000 ரூபா பணமும் பொலிஸார் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கைது செய்யப்பட சந்தேக நபரை பொலிஸார் பரிசோதனை செய்த வேளை அவரிடமிருந்து மேலதிகமாக 343 கிராம் ஹெரோயின் உம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...