தேசிய அடையாள அட்டைக்கான நிழற்படம் எடுக்கும் முறைகளில் மாற்றம்


எதிர்வரும் முதலாம் திகதி முதல் தேசிய அடையாள அட்டைக்கான நிழற்படம் எடுக்கும் முறைகளில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிவில் விமான சேவை அதிகார சபையின் தரத்திற்கு அமைய எடுக்கப்படும் நிழற்படங்கள் மாத்திரமே எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்காக பயன்படுத்தபடவுள்ளன.
அவ்வாறான நிழற்படங்களை எடுக்ககூடிய நிலையங்களில் பெயர்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் கிராம சேவையாளர்களுக்கு இது குறித்து ஆலாசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஒக்டோபர் முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.