நிறைவேற்று ஜனாதிபதி முறைமை பற்றிய சுதந்திர கட்சியின் நிலைப்பாடு விரைவில்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரும் 08ம் திகதி வெளியிட அக்கட்சி தீர்மானித்துள்ளது.
கடந்த வாரம் அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு குழு கூட்டத்தில் சுதந்திரக் கட்சி சார்பாக கலந்து கொண்ட குழுவின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு செயற்பாட்டு குழுவின் அடுத்த அமர்வு எதிர்வரும் 08ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.