ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார்.
செப்டம்பர் 12 முதல் 25 வரை நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தடரில், 19ம் திகதி ஜனாதிபதி லந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அதேவேளைக் குறித்த விஜயத்தின் போது ஜானதிபதி பல நாட்டுத் தலைவர்களுடனும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.