ஆசிரியை றிபாயா சலீம் ஆங்கில மொழி மூலம் எழுதிய ” வாழ்க்கைக்கு வழிகாட்டி ”கைட் ரு லைப்” எனும் நுால் வெளியீட்டு விழா


தெஹிவளை பெசிபத்தேரியன் மகளிா் பாடசாலை, மற்றும் தெஹிவளை அலித்தியா சர்வதேச பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை றிபாயா சலீம் ஆங்கில மொழி மூலம் எழுதிய ” வாழ்க்கைக்கு வழிகாட்டி  ”கைட் ரு லைப்” எனும் நுால் வெளியீட்டு வைபவம் நேற்று(5) தெஹிவளை அலித்தியா சர்வதேச பாடாசலையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. 

 இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு சாஹிரா முன்னாள் அதிபா் ஜக்கிய நாடுகள்  அபிவருத்தி திட்டத்தின் முன்னாள் பணிப்பாளா் கலாநிதி உவைஸ் அஹமட் கலந்து கொண்டாா். நுாலசிரியரிடமிருந்து முதற்பிரதியை கலாநிதி உவைஸ் பெற்றுக் கொண்டாா். அத்துடன் நுாலசிரியையின் புதல்விகள் ருபாய்  வங்கியாளா் ருமைசா,  மற்றும் கட்டாா் நாட்டின்  றிப்கா் கல்வி நிலையத்தின் பணிப்பாளா் றிப்கா பெரோஸ் ஆகியோறும் நுாலின்  விசேட பிரதிகளைப் பெற்றுக் கொண்டனா். 

இந் நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரியைகள் முஸ்லிம் பெண் விரிவுரையாளா்கள், வைத்தியா்கள் என பலா் கலந்து கொண்டனா் . இந் நுால் ஆங்கில மொழி மூலம் இஸ்லாமிய கல்வியைக் கொண்டு சிறந்த ஒரு வாழ்க்கை அமைப்பதற்கு தேவையானதொரு சிறந்த  வழிகாட்டி விடயதானங்களை ஆதாரம் காட்டி  ஆசிரியை  இந்   நுாலில் எழுதியுள்ளாா். 

(அஷ்ரப் ஏ சமத்)
Powered by Blogger.