Aug 5, 2017

அம்பாரை மாவட்டத்தில் தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு மானிய உதவி வழங்கும் நிகழ்வில்: மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் உரை
(எம்.எம்.ஜபீர்)

இலங்கையில் பெருந்தோட்ட பயிர்செய்கையில் தேயிலை, இறப்பர், தென்னை ஆகியவற்றின் உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக வருமானத்தினை ஈட்டிய போதிலும் தற்போது இயற்கை அழிவுகளின் காரணமாக தென்னை பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மக்களின் நாளந்த  பாவனையில் அதிகரித்து காணப்படும் தெங்கு உற்பத்திகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு நமது நாடு இன்று உள்ளதாக என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தில்  தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் உரமானியத்திற்கான காசேலை வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் வ்வாறு தெரிவித்தார்.

அம்பாரை மாவட்ட பிராந்திய முகமையாளர் எஸ்.ஐ.சுசந்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷீக், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் செயலாளர் எம்.எஸ்.ஜௌபீர், அம்பாரை மாவட்ட பிராந்திய உதவி முகமையாளர் எச்.எம்.ஜீ.பண்டார, பயனாளிகள், என பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை திருநாடு தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பெருந்தோட்ட பயிர்செய்கையை மேற்கொண்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து அதனூடாக இலங்கைக்கு அன்னிய செலாவணியை ஈட்டிக்கொடுத்தை நாம் பாடசலையில் கல்வி பயிலும் காலத்தில் அறிந்திருக்கின்றோம். ஆனால் தற்போது  தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காய்க்கு கூட எமது நாட்டில் தட்டுப்பாடு நிலவுதால் வெளிநாட்டிலிருந்து தேங்காயை இறக்குமதி செய்யும் நிலைமை நாட்டில் காணப்படுகின்றது.

அம்பாரை மாவட்டத்தின்இயற்கை அனர்த்தங்களினால் அதிமாக தென்னை மரங்கள் அழிந்து போய்விட்டன. நமது கரையோரப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால்  1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி, அதன்பின்னர் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் ஆகியவற்றின் போது அதிகமான தென்னை மரங்கள் அழிந்து போய்விட்டது. இதைவிடவும் தென்னை மரங்கள் மக்கள் தேவைக்கு வெட்டி அழிக்கப்பட்டு வருவதும், வீடு போன்ற தேவைகளுக்காக அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு காணிகள் குடியேற்ற காணிகளாக மாறி வருகின்றமையாலும் மாவட்டத்தில் தென்னை பயிர்செய்கை அழிந்து போகும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறு அழிந்து செல்லும் பெருந்தோட்ட பயிர்செய்கையை மீட்டெடுப்பதற்காக வெளிலி சவிய கிராமத்துற்கு கிராமம்  திட்டத்தினை மூவின மக்களும் வாழும் அம்பாரை மாவட்டத்திலுள்ள கிராம புறங்களில் வாழும் மக்களிடையே ஊக்குவித்து தெங்கு கைத்தொழில் ஊடக வறுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அம்பாரை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்னைப் பயிர்ச் செய்கை சபை தென்னை வளர்ப்பை மேம்படுத்துவதற்கென 77மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில் முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபாய் தெங்கு நெய்கையாளர்களுக்கு உரத்திற்கான மானியம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு அதிலும் குறைந்து 08 தென்னை மரத்திற்கு அல்லது 21 பேஜ் நிலப்பரப்புக்கு  மேற்பட்ட தென்னை வளர்பாளருக்கு ஒரு தென்னை மரத்திற்கு 56 ரூபாய்  வீதம் வழங்கி மாவட்டத்தில் அழிந்து கொண்டுவரும் தெங்கு செய்கையை மேம்படுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கா  நிதியை வழங்கி வருகின்றமைக்கு நாங்கள் அனைவரும் நன்றி செலுத்த வேண்டும்.

நாட்டில் அதிக வருமானத்தினை பெற்றுக் கொள்ளும் பயிர்செய்கையில் தென்னை அதிலும் வெளிநாட்டிலும் நமது உள்நாட்டிலும் அதிகமான வருமானத்தை ஈட்டித்தரும் தெங்கு பயிர்ச்செய்கையை எமது பிரதேசத்தில் உற்பத்தி செய்து தெங்கு உற்பத்தியில் அதிக இலபத்தினை பெறக்கூடிய முதன்மை மாவட்டமாக எமது மாவட்டம் மாற்றமடைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network