வரி குறைப்பு மக்களை சென்றடையும் முறை ஒன்றை மேற்கொள்ளவும் – NMCRP


அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பானது உரிய முறையில் மக்களை சென்றடைவதற்கான முறை ஒன்றை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம், நிதி அமைச்சர் மங்கள சமரவீராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வரிகள் குறைக்கப்படும் வேளையில் வியாபாரிகள் அதனை சரியான முறையில் நடைமுறை படுத்துவதில்லை எனவும், நுகர்வோர் அதிகார சபை இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என சிறிதும் நம்பிக்கை இல்லை என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டமைக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்க நன்றியை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.