நகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபா ஒதுக்கீடு


இவ்வருடத்தின் முதல் 4 மாத காலப்பகுதியில் நகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் 1300 கோடி ரூபா பாரிய நகர அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் நகர கழிவுப்பொருள் முகாமைத்துவம், நகர புனர்வாழ்வு திட்டம் ,பெரும்போகம் , கொழும்பில் வெள்ளத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி திட்டத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது