மத்திய தரைகடலில் 1700 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நகரம் கண்டுபிடிப்புஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

துனிசியா நாட்டின் அருகே மத்திய தரைகடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 365-ம் ஆண்டு ஜூலை மாதம் கடலில் ஏற்பட்ட சுனாமி அலையால் எகிப்தில் உள்ள அலெக்சாண்டரியா நகரம், கிரேக்கத்தில் உள்ள கிரேட் தீவு ஆகியவை கடலில் மூழ்கின. அவை மூழ்கி கிடந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் துனிசியா நாட்டின் அருகே மத்திய கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4-ம் நூற்றாண்டில் நியாபொலிஸ் என்ற நகரம் கடலில் மூழ்கியதாக தகவல்கள் உள்ளன. இது அந்த நகரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நகரில் ஏராளமான கட்டிடங்கள் தண்ணீருக்குள் முழ்கி கிடப்பது நன்றாக தெரிகிறது. மேலும், அந்த நகரில் அந்த காலத்திலேயே பல்வேறு தொழிற்சாலைகளும் இருந்தன. அவையும் மூழ்கி கிடப்பது தெரிகிறது.
ஒரு தொழிற்சாலையில் 100 ராட்சத தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலையாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.