இறக்காமம் கலாசாரப் பேரவையின் பொதுக் கூட்டம் 2017


எஸ்.எம்.சன்சீர்
சிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலம் 

இறக்காமம் கலாசாரப் பேரவையின் பொதுக் கூட்டம் இன்று 08 வெள்ளி காலை 9.30 மணியளவில் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர்  கூடத்தில்    பிரதேச  செயலாளர் M.M நஸீர் அவர்களின் தலைமையின் இடம் பெற்றது.  இன்  நிகழ்வின்போது உதவிப்  பிரதேச  செயலாளர்  நஹிஜா  முசப்பிர் அவா்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இறக்காமம் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் A.H சபீக்கா R.D. வசந்தா மற்றும் A இப்றா லெவ்வை ஆகியோரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் இருக்கும் சகல  கலை மன்றத் தலைவர்கள்  மற்றும் கலைஞர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அத்தோடு இக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

01 மறைந்த மர்ஃஹூம் .கவிக் குயில் மீரா உம்மா தொடக்கம் மூத்த கலைஞர்கள் வரையான கலைஞர்களின் புகைப் படங்கள் கவிதைகள் மற்றும் வீடியோக்கள் யாவும் புத்தக வடிவில் அமைத்தல்.
02 எதிர் வரும் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு ஐந்து வரையான கலைஞர்களின் பிள்ளைகளைக் கொண்டு பட்டம் விடும் போட்டி நடாத்தல்.
03 எதிர் வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச புகைப்பட கண் காட்சி ஒன்றை நடாத்தல் .
என்பன பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.