20 ஆவது அரசியலமைப்பு திருத்தமும் முஸ்லிம் காங்கிரஸின் ஏமாற்று வித்தையும்


சட்டதரணி சக்கீக் 

இன்று முஸ்லிம் காங்கிரஸாலும், தமிழ் கூட்டமைப்பாலும் கையுயர்த்தி ஆதரவழிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தமானது அவர்கள் கூறுவது போன்று உயர் நீதிமன்றத்தால் 20 ஆவது திருத்தத்தில் திருத்தப்பட (மாற்றங்கள் செய்யப்பட்ட) திருத்தச்சட்டம் அல்ல. அது பாராளுமன்றத்திற்கு உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சரால் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படும் சட்டமூலம் ஆகும். இச் சட்டமூலம் பாராளுமன்ற வாக்கெடுப்பில் 2/3 பெரும்பான்மையை பெற்றால் போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு அவசியாமான என்பதை தீர்மானிப்பதே உயர் நீதிமன்றம் செய்ய முடியும். இவர்கள் கூறுவது போன்று அதில் திருத்தங்களை உயர் நீதிமன்றம் செய்ய முடியாது. சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என உயர் நீதிமன்றம் அறிவித்தால் இச் சட்டமூலத்தை இவ் அரசாங்கம் தன்னிடமுள்ள 2/3 பெரும்பான்மையை கொண்டு இலேசாக இதை நிறைவேற்றிக்கொள்ளும் (மாகாண சபைகளின் அனுமதியுடன்).
இத் திருத்த சட்டமூலமானது இலங்கையில் உள்ள மாகாண சபைகளின் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குவதை முதல் நோக்காக கொண்டு அவசரமாக நிறைவேற்ற துடிக்கிறது இந்த அரசாங்கம்.

இதற்கான காரணம் இந்த மாதத்துடன் முடிவடைய இருக்கும் சில மாகாண சபைகளின் ஆட்சிக்காலத்தை நீடித்து அம் மாகாண சபை தேர்தல்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் கள்ள எண்ணத்துடன் இந்த அரசாங்கம் இதை நிறைவேற்ற அதிக பிரயத்தனம் செய்கிறது அதுவும் அரசியலமைப்பை முற்றாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்  இக் காலகட்டத்தில்.
அத்துடன் சகல மாகாண சபைகளின் கலைப்பிற்கான் திகதிகளை பாராளுமன்றம் தீர்மானிப்பதுடன் அனைத்து மாகாண சபைக்குமான  தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதும் இச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய   அம்சமாகும். 5 வருட காலத்திற்கு மாத்திரம் என மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மீறி அதன் அதிகாரத்தை நீடிப்பது ஜனனாயக விரோதமானதாகும். அத்துடன் 5 வருட காலத்திற்கொரு தனது மாகாண உறுப்பினரை தேர்வு செய்யும் ஜனனாயக  உரிமை மக்களுக்கு இல்லாமல் ஆக்கப்படுகின்றது. மேலும் இதை நிறைவேற்ற கையுயர்த்தியவர்களும் மக்கள் ஆணைக்கும் ஜனனாயகத்திற்கும் எதிரானவர்களே....
இவ்வாறு கையுயர்த்தி விட்டு மகிந்த சார்பு கதைகளை விட்டு மக்களை திசைதிருப்ப அறிக்கை விடுகின்றனர். அத்துடன் திருத்தம், சரத்து, உயர் நீதிமன்றம் என மக்களை குழ்ப்புகின்றனர். இதுவும் முஸ்லிம் காங்கிரஸின் மற்றுமொரு வரலாற்று துரோகமாகும் ( 18வதுக்கு ஆதரவளித்தது போன்று).