பாலர் பாடசாலையில் கல்விகற்க 21 வருடம் போராடிய ஹோசனா அப்துல்லாஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
சூடான்  நாட்டு அகதியான  'ஹோசனா அப்துல்லா' சிறுவயது முதலே கல்விகற்க  மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். ஆனால் அவருக்கு காலமும் சூழ்நிலையும் பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இருந்தும்  'தான் கல்வி கற்க வேண்டும்' என்ற வைராக்கியத்தை மட்டும் மனதில் கொண்டிருந்தார் ஹோசனா.

பல வருடங்களுக்கு பிறகு கல்வி கற்கும் வாய்ப்பு "அகதிகளுக்கான உயர் ஆணைய ஐக்கிய நாடுகள் சபை" (UNHRC) மூலம் கிடைத்தது. அதனை பயன் படுத்திக்கொண்ட ஹோசனா, தனது 21 வது வயதில் பாலர் பாடசாலையில் சேர்ந்தார். அதை பற்றி பேசிய அவர் "பாடசாலையில் நான்  சிறுபிள்ளைகளுடன் அமர்ந்திருப்பேன். அவர்கள் என்னை ஒரு ஆச்சரியப் பொருளாக கண்டனர். ஆனால் நான் அதை பொருட்படுத்தவில்லை. எனது மனம் 'கல்வி வேண்டும்' என்பதில் உறுதியாக இருந்தது எனவே மற்றவர்கள் கேலியாக பேசுவதையும் நான் கண்டுகொள்ளவில்லை.கல்வி கற்பதிலேயே எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்"என்று ஆர்வத்துடன் பேசியுள்ளார். ஹோசனாவின் இந்த வீடியோவை UN Refugee agency ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.