கந்தளாயில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கரும்பு உற்பத்தி


கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
 
25 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியின்போது கரும்பு பயிரிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எம்.டி. சுகர் நிறுவனத்தினால் 150 ஹெக்டயர் காணியில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. தொழிற்சாலையில் தற்போதைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு நவீன கட்டிடங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 
இந்தப்பணிகள் முழுமையாக பூர்த்திச்  செய்யப்பட்டபின்னர் ஆயிரத்து 500 பேருக்கு நேரடியாகவும் மேலும் சிலருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.