மலேசியாவில் அரபு மதரசாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு


கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கிவந்த Darul Quran Tahfiz என்ற குர்ஆன் மத்ரஸாவிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தீவிபத்தில் குர்ஆன் மத்ரஸாவில் கல்வி பயின்ற 23 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் 13 தொடக்கம் 17 வயதுடைய மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பலர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்ரஸா விடுதியின், படுக்கை அறைக்கு அண்மையிலிருந்து தீ பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...