பசீர் வைத்திருக்கும் சி.டி; வெளியான 3 செக்கன் வீடியோவால் பரபரப்பு (Video)முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மு.காவின் முக்கியஸ்தர்கள் சம்பந்தப்பட்ட அந்தரங்க காட்சிகள் அடங்கிய சி.டிக்கள் வைத்திருப்பதாக முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் அவர்கள் முகப்புத்தகத்தில் பலமுறை பதிவிட்டிருந்தார்.

பசீர் வைத்திருக்கும் சி.டி; வெளியான 3 செக்கன் வீடியோவால் பரபரப்பு (Video) இந்த தலைப்பை பார்த்து விழுந்தடித்து செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் அன்புள்ள வாசகர்களுக்கு, 

இலங்கை முஸ்லி்ம்களுக்க சி.டியை பார்ப்பதுதான் தேவையா? இந்த அசிங்கமான காட்சிகளை பார்த்துவிட்டால் எல்லாம் முடிந்து விடுமா? ஒரு முஸ்லிமின் குறையில் நீங்கள் குளிர்காயலாமா? இலங்கை முஸ்லிம்களுக்கு வேறு பிரச்சினைகள் இல்லை ஏன் இப்படியொரு சிந்தனை.

ஒருவரின் குறையை மறைத்தால் அல்லாஹ் உங்கள் குறையை மறைப்பான், நாம் இன்று மிகவும் இக்கட்டான காலப்பகுதியில் வாழை்கிறோம், வடக்கிலும் கிழக்கிலும் எமது காணிகள் சூறையாடப்பட்டுள்ளன. நமது கலாச்சாரம் அத்தியவசிய தேவைகள் பறிபோயுள்ளது. நமது பள்ளிவாசல்காணிகள் பறிபோய் உள்ளது. ஹலால் சான்றிதழ் பறிபோயுள்ளது இவற்றை நாம் இந்த நல்லாட்சி அரசில் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும், அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் அதைவிடுத்து சி.டியும் அசிங்கமான மேடைப்பேச்சுக்களும் வேண்டாமே. முடிந்தவரை இதை செயார் செய்யவும்.