38 பேருக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நியமனம்


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 38  பொது சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் இன்று (13.09.2017) கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைக்கான வெற்றிடங்களை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் 04 பிராந்தியங்களுக்கும் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கும் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இதில் 16 தாதிய உத்தியோகத்தர்களும், 22 வோர்ட் மாஸ்டர்களுக்குமான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். அன்ஸார், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முருகாணந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் உசைனுடீன் உள்ளிட்டவர்களுடன் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கி வைத்தனர்.