பெண் பொலிசார் 464 பேருக்கு பதவி உயர்வு

 


பொலிஸார் 464 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
 
பெண் கான்ஸ்டபிள் பதவியிலிருந்த, தகுதி வாய்ந்த 464 உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
மிக நீண்ட நாட்களாக பொலிஸ் திணைக்களத்தால் பதவி உயர்வு வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வந்த நிலையில், பொலிஸ் ஆணைக்குழுவின் முடிவுக்கமைய பொலிஸ் மா அதிபரினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளர்து.
 
இதற்கமைய, கடந்த வாரம் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2,599 பொலிசாருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது