சந்தையை புனரமைக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு


ஷபீக் ஹுஸைன்
பொத்துவில் பொதுச் சந்தையை புனரமைப்பு செய்வதற்கான ஆரம்பவேலைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (16) ஆரம்பித்து வைத்தார்.

”தோப்பாகிய தனிமரம்” பொருந் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 17ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் 500 மில்லியன் ரூபா செலவில் இப்பொதுச் சந்தை புனர் நிர்மாணிக்கப்டவுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் வாசித், கட்சியின் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.