அக்கரைப்பற்று பிரதேச சபையை இம்முறை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றும்


அக்கரைபற்று பிரதேச சபையை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் என கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரிவுகளின் பொறுப்பாளர் இம்ரான் தெரிவித்தார், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளின் கட்சி இணைப்பாளராக முக்கிய புள்ளி ஒருவர் கட்சியினால் நியமிக்கப்படவுள்ள நிலையில் குறித்த பிரமுகர்களை சந்தித்த இம்ரான் மஹ்ரூப்,

வலுவிழந்து காணப்படும் சில சபைகளை ஆளம் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை கைப்பற்ற சந்தர்ப்பம்  எமக்கு கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்கள் சில வலுவிழந்து காணப்படுகிறது. அதை கைப்பற்ற முயற்சிப்போம் என்றார்.