இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு


இவ்வாண்டின் ஆரம்பம் தொடக்கம் இதுவரை சுமார் 360 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளன.
குறித்த காலகட்டத்தில் இலங்கையில் டெங்கு நோயினால் ஒருலட்சத்து 50 ஆயிரத்து 407 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் பொது மக்கள் தமது சுற்றுச்சூழலை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.