கருமலை ஊற்று பள்ளிவாசலும் முஸ்லிம்களின் பூர்வீக புனித தலமாகும்


சேருவில விகாரையையும்  கோணேஸ்வர ஆலயத்தையும்  பூர்வீக புனித தலமாக  பெளத்தஇ இந்து மக்கள் கருதுகிறார்கள். இதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.   அது போலஇ  சீனக் குடாஇ வெள்ளைமணல் கருமலை ஊற்று பள்ளிவாசலும் முஸ்லிம்களின் பூர்வீக புனித தலமாகும். எனவே அவற்றை விடுவித்து மக்களின் பாவனைக்கு  பெற்றுத் தர வேண்டும் என பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சரிடம் திருகோணமலை பாராளமன்ற உறுபினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்தார்.

அண்மையில் இம்ரான் எம்பியின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன    கிண்ணியாவுக்கு விஜயம் செய் திருந்தார். அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இம்ரான் எம்பி இவ்வாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன  கலந்து கொண்ட இந்த சந்திப்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்இ

 திருகோணமலை மாவட்ட மக்கள் 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டது மாத்திரமன்றி அதனைத்  தொடர்ந்து இயக்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நல்லாட்சியில் மக்கள் வாழ்வாதாரங்களை வேண்டி நிற்கின்றனர்.

நாட்டின் பாதுகாப்பு எல்லாவற்றையும் விட மேலானது. அவற்றை குறைப்பதற்கோ  கொஞ்சைப் படுத்துவதற்கோ நான் கோரவில்லை. கிண்ணியா இ மூதூர் இ குச்சவெளிப் பிரதேசங்களில் கடந்த 30 வருடங்களாக வீடுகளையும் காணிகளையும் இழந்து மக்கள் நிற்கின்றனர். ஒரு வகையில் யுத்த காலத்தில் நாட்டின் பாது காப்புக்கு காணிகளையும் வீடுகளை பும் வழங்கி தியாகம் செய்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

இப்போது யுத்தம் முடிந்திருக்கிது .அவர்கள் வாழவதற்கு அவர்களுடைய காணிகளும் வீடுகளும் தேவைப்படுகின்றன. அவற்றை பெற்றுத் தர ஆவண செய்ய வேண்டும் .இதற்காக நான்  படையினரை விலகச் செல்லவில்லை. மக்களின் சொந்த காணிகளைக் விடுவித்து விட்டு இ அதற்கு அருகில் இருக்கும் அரச காணிகளில் படை முகாம்களை அமைக்க முடியும்.

திருகோணமலையில் அமைந்து உள்ள கண்ணியா வெந்நீர் ஊற்று பிரதேசதில் மு ஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் இருக்கின்றன. 1865ஆண்டு தொடக்கம்  முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. 35 வருடங்களாக அவர்கள் அகதி வாழ்க்கை வாழ்கிறார்கள்.

நாம் கடந்த பொத்தேர்தலிலும் பாராளமன்ற தேர்தல் காலத்திலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைய அவற்றை விடுவிக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நீங்கள் ஆவண செய்ய வேண்டும் இதுவே இப் பிரதேச மக்களின் அதியுச்ச எதிர்பார்ப்பாகும்

எனவேஇ எனதும் எனது மக்களினதும் கோரிக்கைகளை ஏற்று நல்லாட்சி அனுகூலங்களை திருமலை மாவட்ட  முஸ்லிம் மக்களும் பெற்றுக் கொள்ள வழி வக்க வேண்டும்

எனது வேண்டுகோளை ஏற்று இங்கு விஜயம் செய்து எமது மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தமைக்காக அமைச்சருக்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்றார்.