ரோஹிங்ய அகதிகள் கையடக்க தொலைபேசி பயன்படுத்த பங்களாதேச அரசு தடை


ரோஹிங்யா அகதிகளுக்கு செல்போன் சிம் கார்டுகளை விற்பனை செய்ய பங்களாதேச அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதுவரையில் 4 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி பங்களாதேசம் வந்துள்ளனர். 
பங்களாதேசம் எல்லை வந்து உள்ள ரோஹிங்யா அகதிகள் அடிப்படை தேவைகள் இன்றியும், மருத்துவ வசதியின்றியும் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ளனர்.

இந்நிலையிலேயே ரோஹிங்யா அகதிகளுக்கு செல்போன் சிம் கார்டுகளை விற்பனை செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. 

வங்காளதேசத்தில் உள்ள தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, அகதிகளுக்கு சிம் கார்டுகளை விற்பனை செய்யக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டை மீறி விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.