பொலன்னறுவை தேர்தல் தொகுதியின் சுதந்திர கட்சி அமைப்பாளராக முஸ்லிம் ஒருவர்பொலன்னறுவை மாவட்டத்தின் பொலன்னறுவை தேர்தல் தொகுதியின் புதிய சுதந்திர கட்சி அமைப்பாளராக பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், பிரபல இளந்தொழிலதிபருமாவார். 

பொலன்னறுவை மாவட்டத்தின் கல்வி, பாதை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேன்படுத்தத் தேவையான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதும், படித்த வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச தொழில்வாய்ப்புக்களைக் பெற்றுக்கொடுப்பதே தனது ஒரே குறிக்கோளாகுமென தெரிவிக்கின்றார். புதிய அமைப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி).