Sep 19, 2017

உலக வணிகத்துறையில் கலக்கும் இலங்கை முஸ்லிம்!!!



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

மல்வானையை சேர்ந்த இர்ஷாத் ஏ காதர் அவர்கள் 18.09.2017 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெறும் "Round Table Talk" எனும் மாபெரும் மாநாட்டில் வளவாளராக பங்குபற்றுகின்றார்...
வருடாந்தம்  நடைபெறும் இந்த "Round Table Talk" இம்முறை மலேசியாவில் நடைபெறுகிறது.
இதில் உலக வியாபாரத் துறையில் சிறந்து விளங்கும் முஸ்லிம்களை "The Jewels of Muslim World" என நாமத்தோடு அம்மாநாட்டில் கௌரவப்படுத்தி வருகிறது...
இந்த முறை அம் மாநாட்டிற்காக தெரிவு செய்த உலக வியாபாரத் துறையில் சாதனை படைத்து வரும் 16 முஸ்லிம்களில் இலங்கையைச் சேர்ந்த இர்ஷாட் ஏ காதர் அவர்களையும் தெரிவு செய்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் முன்னணி நிறுவனமான அல் முஸ்பா நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளராக கடமையாற்றிவரும் இவரால் ஆற்றப்பட்ட பல்வேறு சாதனைகளுக்காகவே இவருக்கு இக் கௌரவம் கிடைத்துள்ளது...
மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் பின்பு கொழும்பு றோயல் கல்லூரியில் உயர் கல்வியை முடித்த இவர் உலகின் பலவேறு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் தொழில் தேர்ச்சியைப் பெற்றவர்.
இவர் மல்வானை, வள்கமயை சேர்ந்த அப்துல் காதர் மாஸ்டர் மற்றும் முபீதா ஆசிரியை அவர்களின் புதல்வராவார்.
உலக வணிகத்துறையில் சாதனை படைத்துவரும் இலங்கை முஸ்லிமான இர்ஷாத் ஏ காதர் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network