முஸ்லிம்களின் உறுப்புருமை இழக்கப்படும்போது பட்டாசு கொழுத்தும் இழிநிலை ஏனோ?அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று இரவு பட்டாசுகள் கொழுத்தி கூச்சலும் எழுப்பப்பட்டது, இந்த விடயம் தொடர்பில் புலனாய்வு பிரிவு மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை கேட்டறிந்த பொழுது அக்கரைப்பற்றில் உள்ள கட்சியினரின் வேலையே என குறிப்பிட்டனர், இந்த ஆராவாரம் எதற்காக எனில் முஸ்லிம் கட்சியின் உறுப்புருமைகள் இல்லாமல் ஆக்கப்படுகிறது என்ற ஓரே நோக்குதான், எப்படிப் பாரத்தாலும் நமது சமூகம் அரசியல் ரீதியில் பலமிழக்கப்படுகிறது இது குறித்து சிந்திக்காத மடமைகளா நாங்கள்,

முஸ்லிம்களின் தேவைப்பாடு இன்று இவ்வளவுதானா? நமது ஒற்றுமை சீர்குலையவே பல சமூகங்கள் எத்தனித்துக் கொண்டிருக்கிறது, நாமே நம்மை காட்டிக் கொடுக்கலாமா? நமது போராட்டங்களின் வெற்றி இதுதானா? நமக்குள் நாம் கேட்போம்

சிறாஜ்டீன் - சிலோன்  முஸ்லிம் வாசகர்