சர்வதேச அளவிலான கொக்கேய்ன் கடத்தலில் இலங்கை தொடர்பு


சர்வதேச அளவில்  கொக்கேய்ன் போதைப்பொருள் பரிமாறப்படும் தளமாக இலங்கை மாறி வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு துறைமுகத்தில் கடந்த 14 மாதங்களில் 6 தடவைகள் பெருமளவிலான கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஆயிரத்து 770 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளது என்றும் அதன் பெறுமதி 140 மில்லியன் டொலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலன்களில் இருந்து கொக்கேய்ன் மீட்கப்பட்ட நிலையில் இவை தவறுதலாக அனுப்பிவைக்கபட்டவையாக தெரியவில்லை என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.