பிரபல அரசியல் பிரமுகரின் சகாக்களின் பேஸ்புக் பதிவுகளுக்கு எதிராக முறைப்பாடுபொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்,என்மீதும் எனது இணைய ஊடகம் சிலோன் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி கீழ்த்தரமாக முகப்புத்தகத்தில் பதவிட்ட பல பேக் ஐ.டிக்களுக்கும் ஒருசில உண்மையான நிஜ ஐ.டிக்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் எனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் எனது பிரத்தியேக சட்டத்தரணியின் வேண்டுகோளின் பெயரில் முறைப்பாட்டை இன்று அக்கரைப்பற்று பொலிசில் பதிவு செய்தோன், இந்த அநாகரிமான செயலை முகப்புத்தகத்தில் தொடர்ந்தும் செய்வார்கள் எனில் அவர்களின் IP முகவரிகளுடன் வழக்கு பதிவு செய்து மான நஷ்டஈடு வழக்கு தொடரவும் எனது சட்டத்தரணி பணிப்புரை விடுத்துள்ளார்.
என்மீது அதீத அன்புவைத்திருக்கும் நண்பர்களுக்கு இறைவன் நல்லருள் பாலிப்பானாக - பஹத் ஏ.மஜீத்  -  சிலோன்பி முஸ்லிம் பிரதம ஆசிரியர் 

கடந்த வாரங்களில் பொய் முகவரிகள், நிஜ முகவரிகள் மூலம் சிலோன் முஸ்லிம் பிரபல ஆசிரியரை துாற்றிய அரசியல் பிரமுகர் ஒருவரின் குடும்ப உறவினர்கள் மீதே இந்த பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலோன் முஸ்லிமின் மீதும் பிரதம ஆசிரியர் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளும் துாற்றிய வசனங்களும் இடம்பெற்றிருந்த காரணத்தினால் மான நஷ்டஈடு வழக்கு தொடரவும் முஸ்தீபாகியுள்ளது.