யாழ் முஸ்லிம்களுக்கு விடிவு பிறந்துள்ளது; தொடரும் பணிகளால் சந்தோசம்பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறி வருகின்ற முஸ்லீம் மக்களின் வீட்டுத்திட்டத்தில் நிலவி வந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று(17) யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பணிமனைக்கு யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பி.எஸ் எம் சுபியான் மௌலவியின் அழைப்பினை ஏற்று வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது தற்போது யுத்த நிலைமை காரணமாக வீடுகள் இன்றி உள்ள முஸ்லீம் மக்களுக்கு வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள் பயனாளிகள் தெரிவு தொடர்பில் உள்ள முரண்பாடுகள் அவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்த மக்கள் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்து மறுக்கப்பட்ட மக்கள் உள்ளிட்டோர் தத்தமது பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்து கூறினர்.

இந்நிலையில் குறித்த வீட்டுத்திட்ட பிரச்சினைகளை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக இப்பிரச்சினைகளுக்கு  உரிய தீர்வினை பெற்று தருவதாக தெரிவித்துள்ளனர்.