அதாஉல்லா மேடைகளில் அசிங்கமாக பேசுவதை நிறுத்துமாறு தே.மு.தே.இ அறிவுரை!அண்மைக்காலமாக அரசியல் மேடைகளில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா ஏனைய முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை அசிங்கமான வார்த்தை பிரயோகங்களால் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசிய இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

முஸ்லிம் தலைவர்கள் குறித்த  இயக்கத்தின் ஊடக அறிக்கை இன்று வெளியாகியுள்ளது, அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா பலசேவைகளை மக்களுக்கு செய்தவர் அண்மைக்காலமாக அவருடைய பேச்சுக்கள் அவரின் அரசியலை கீழ்த்தரமாக்கிவிடும் குறிப்பாக முஸ்லிம் சகோதரனை பற்றிய தவறான வாரத்தைகள் அவர் பேசுவதையும் அதனை கோடான கோடி சமூக வலைத்தள வாசகர்கள் இணையத்தில் பார்பதையும் ரசிப்பதையும் அதனை பகிர்வதையும் காணக்கூடியதாய் உள்ளது இதனை தவிர்த்து அழகிய முறையில் மேடைப்பேச்சுக்களை அரங்கேற்ற முடியும். அவர் செய்வார் என்ற நம்பிக்கை இயக்கத்திற்கு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.