மாயக்கல்லியில் ஒற்றுமைப்பட்ட தமிழனும் சிங்களவனும்; யாருக்கு பாதிப்பு!மாயக்கல்லி விவகாரம் பெரும் பூதாகரமாய் வெடிக்கும் என்பதில் அச்சமில்லை, இதை வைத்தே அம்பாறையில் புதிய சிங்கள குடியுற்றங்கள் இடம்பெறும் உண்மையில் அப்பகுதியில் சிங்களவர் வாழந்திருப்பதற்கான அடையாளங்கள் இருந்தாலும் முஸ்லிம்கள் குடியேறிய பிறகு அல்லது தமிழீழ விடுதலைப்புலிகள் உருவெடுத்த பிறகு அவ்விடங்களை விட்டு சிங்களவர்கள் ஓடோடிச் சென்று விட்டனர் என ஒரு கதையுண்டு.

புராதான இடங்களை தங்கள் இடங்கள் என்று தம்பட்டம் அடிக்கும் புத்த மதகுருமார்கள் வரலாற்றில் முஸ்லிம்கள் சிங்களவருக்கு உதவியதையும் பாதுகாத்தமையையும் மறக்க கூடாது. இன்று மாயக்கல்லியில் முஸ்லிம்களை எதிர்த்து தமிழர்களுடன் சர்வதேச அஜென்தாவில் ஒன்றிணைந்துள்ள சிங்கள - தமிழர்கள் விடுதலைப்புலிகள் காலத்தை சொஞ்சம் மீட்டிப்பார்த்தலும் அழகு.

விகாரை கட்டுவதோ சிலை வைப்பதோ முஸ்லிம்களை பாதிக்காது, அடாத்தான குடியேற்றங்கள், அததுமீறல்கள் போன்றவையும் சிங்கள இனவாதத்தையும்தான் முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.