கருக்கலைப்பு சட்டபூர்வமாவதற்கு கத்தோலிக்க பேரவை கண்டனம்


கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கண்டித்துள்ளது.
கருக்கலைப்பு சட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பது மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை கைவிடுமாறும் பேரவை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டு அமர்வில் இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் எக்காரணத்திற்காகவும் கருக்கலைப்பு சட்டம் அமுலாக்கப்படக்கூடாது. ஒருவரின் உயிர்வாழ்வு அவரது கருத்தரிக்கும் நிமிடத்திலிருந்து ஆரம்பமாகிறது என்பது திருச்சபையின் நம்பிக்கையாகும். அது ஒரு புனிதமான  செயற்பாடு எனவும் கத்தோலிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது