சாமான்துறையென்று சம்மாந்துறையை பேசிய அதாஉவுல்லாவுக்கு குவியும் விமர்சனம்!துறையூரான் 
முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தன்னுடைய பேச்சில் நன்னோக்கத்துடன் குறித்த கருத்தைத் தெரிவித்திருந்தாலும் கூட. சாதாரண மக்களிடம் சிறந்த, உண்மையான கருத்துகளைக் கொண்டு சேர்க்கின்ற பொறுப்பு வாய்ந்த பணி பிரபல்யங்களுக்கு இருக்கின்றது, அவர்களின் ஜனரஞ்சகத்தன்மை அவற்றைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றது.
சம்மாந்துறையின் அருமை பெருமைகளை சிறப்பாக பிரஸ்தாபித்து சிலாகித்துக் கூறுகின்ற அதே வேளை தனது பேச்சில் அநாயசமாக சம்மாந்துறையின் பெயர்பற்றிய ஆதாரப்பூர்வதன்மை குறைந்த செய்தியொன்றைத் தெரிவித்துவிட்டுச் செல்கின்றார்.

(இரட்டை அர்த்தம் தருகிற குறித்த வார்த்தை சிலரால் தவறாக புரியப்பட்டிருக்கின்றது - இது புரிதலில் குறைபாடு என்று அலட்சியப்படுத்தி விட வேண்டிய விடயமென்று  கருதவில்லை)
உரையாற்றிய அதாஉல்லா சம்மாந்துறையை சாமான்துறையென விமர்சித்து இருந்தார்
ஊர்களின் பெயராய்வு தொடர்பான விடயங்களில் அபிப்பிராய பேதங்கள் மலிந்து காணப்படுகின்றன ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியான தகவல்களே பிரகடனப்படுத்தப்படவேண்டியவை,
சம்மாந்துறையின் பெயர் தொடர்பில் அண்மைக்காலமாக இனவாதிகளின் வார்த்தை விளையாட்டுக்கள், கலாசார ஆக்கிரமிப்பு போன்ற மறைமுக அரசியல் நிகழ்ச்சிநிரல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்பதையும் நமது எதிர்கால கருத்தாடல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது  தாழ்மையான கருத்து.

உரையின் வீடியோ