இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய அடைமழை பெய்யும். வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் காலை நேரங்களில் மழை பெய்ய கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
விசேடமாக மத்திய, ஊவா, வட மத்திய மாகாணத்திலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்க முடியும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசகூடும் என குறிப்பிடப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.