றோஹிங்கிய முஸ்லிம்களை சீண்டிய அக்மீமன தயாரத்ன தேரர் மஹிந்தவி்ன் சகா

டான் பிரசாட் மஹிந்தவின் அஜன்டாவில் இயங்குவதாக சிலோன் முஸ்லிம் இணையத்தளத்தில் ஒரு செய்தி பதிவாகியிருந்தது, 

இதற்கு அக்கரைப்பற்று கட்சியை சேர்ந்த கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் அந்த புகைப்படம் கிராபிக் என்று சொல்லி சிலோன் முஸ்லிம் ஊடகத்தை பற்றி பல்வேறு விதத்தில் விமர்சித்தனர் விமர்சித்து கொண்டிருக்கின்றனர்,
டானி்ன் கதையை ஒருபக்கம் வைத்துவிட்டு நேற்று டானுடன் வந்த இன்னுமொரு முக்கிய பிக்கு,
அக்மீமன தயாரத்ன தேரர் ,
இவர் கடந்த 2004ல் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர்,
பின்னர் 2005ல் மஹிந்தவின் வெற்றிக்காக மேடை மேடையாக உரையாற்றித் திரிந்தவர் அத்தோடு பொதுபலசேனாவின் தீவிர செயற்பாட்டாளர் இவர் மஹிந்தவின் தீவிர ஆதரவாளர், மஹிந்தவோடு நேரடி அரசியல் செய்பவர்,
நாட்டில் ஒரு இனக்கலவரத்தை உண்டாக்கியாவது ஆட்சி மாற்றத்தை உருவாக்கவேண்டும், இதுவே அவர்களி்ன் நோக்கு - அல்லாஹ் எனது சமூகததை பாதுகாப்பானாக.