பயணிகளைக் காத்த சாரதிஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

பேரூந்தை ஓட்டிக்கொண்டிருந்த சாரதி ஒருவர் பேருந்தைக் கட்டுப்படுத்தி பயணிகளைக் காப்பாற்றியபின் தன் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து ஒன்றை ஓட்டி சென்ற சாரதி ஒருவரே திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் பயணிகள் சேவைப் பேருந்தில் சாரதியாக இருக்கும், ஜயம்பதி பத்மசோம எனும் அறுபது வயதான நபர் ஒருவர் பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென்று நோய்வாய்ப்பட்டுள்ளார்.

பேருந்து வேகமாகச் சென்றுகொண்டிருந்த அந்த நேரம் பேருந்தில் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட இந்த அசாதாரண நிலையினால் தடுமாற்றமடைந்த சாரதி பேருந்தைக் கஸ்டப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு அதனை வீதியின் ஓரமாக நிறுத்தியுள்ளார். அதன்பின்னர் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையின் விளிம்பிலும் பேருந்தைக் கட்டுப்படுத்தி பாரிய விபத்து ஒன்றினைத் தவிர்த்துள்ளார்.
அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்த பயணிகள் நெகிழ்ச்சி பொங்க கண்ணீர் வடித்ததோடு தனது உயிரையும் பாராது தம்மைக் காப்பாற்றிய சாரதியைப் பற்றி பயணிகள் பெருமிதத்தோடு நோக்கியுள்ளனர்